ஏகாம்பரநாதர் கோயில் பிரசாத விபூதியில் கண்ணாடி துகள்களா?…பக்தர்கள் புகார்

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரத்தில் ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில் சைவத் திருத்தலமாக விளங்குகிறது. இக்கோயிலுக்கு உள்ளூர், வெளியூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். பழமையான சிற்பங்கள், கிளைக்கு ஒரு சுவை தரும் அதிசய மாமரம் உள்பட பல சிறப்புகளை இக்கோயில் கொண்டுள்ளது. இந்நிலையில் பெரிய காஞ்சிபுரத்தை சேர்ந்த பக்தர்கள் சங்கர், சீனிவாசன் தினமும் ஸ்ரீ ஏகாம்பரநாதரை தரிசிப்பது வழக்கம். கடந்த 2 நாட்களுக்கு முன் அவர்கள், தரிசனம் செய்து விபூதி பிரசாதம் வாங்கி சென்றனர்.ஆனால், அந்த விபூதி தரமற்ற முறையில் இருந்ததாகவும், அதில் சில கண்ணாடி தூகள் போன்ற பொருட்கள் கலந்திருப்பதாகவும் தெரிந்தது. மேலும், அந்த விபூதியை நெற்றியில் பூசும்போது சிராய்ப்புகள் ஏற்பட்டு சிரமப்படுவதாக கோயில் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். கோயில்களில் வழங்கப்படும் விபூதியை பிரசாதமாக கருதும் பக்தர்கள், அதை வாயில் போட்டு கொள்வதை சில பக்தர்களின் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்தவேளையில் விபூதியில் கண்ணாடித்துகள் போன்ற பொருள் கலந்துள்ளதாக கூறப்பபடும் புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. …

Related posts

சென்னை அடுத்த ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் கனமழை!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!