எஸ்பி செல்வராஜ் ஆய்வு அரியலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

அரியலூர்: அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி தேர்ச்சி பெறாத/தேர்ச்சி பெற்றவர்கள், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டபடிப்பு தேர்ச்சி பெற்ற பொது பிரிவினர் தங்களது கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து (5) ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பதிவுதாரர்கள் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி தேர்ச்சி பெறாத/ தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டபடிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரை தங்களது கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவடைந்திருக்க வேண்டும். 31.12.2023 அன்று தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர் 45 வயதிற்குள்ளும், இதரப்பிரிவினர் 40 வயதிற்குள்ளும் இருக்கவேண்டும் மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கு உச்சவயது வரம்பு ஏதும். இல்லை. விண்ணப்பதாரர் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலுபவராக இருத்தல் கூடாது. ஆனால், தொலைதூர கல்விபயிலுபவராக இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கு வருமான உச்ச வரம்பு ஏதும் இல்லை.

Related posts

பொதுமக்களின் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு தஞ்சை அரண்மனை வளாகத்தில் புத்தகத்திருவிழா: அரங்கம் அமைக்கும் பணி தீவிரம்

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலைய அவலம்: குளம்போல் தேங்கிக்கிடக்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்

‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தில் பெறப்படும்; 00 சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு : கலெக்டர் தகவல்