எஸ்ஐ தேர்வில் முறைகேடு 33 இடங்களில் சிபிஐ சோதனை: ஜம்மு, 5 மாநிலங்களில் நடந்தது

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம், காவல்  துறையில் உதவி ஆய்வாளர்களை நியமிப்பதற்கான எழுத்து தேர்வு கடந்த மார்ச்சில் நடந்தது. இதன் முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியானது. இதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த முறைகேடுகளை விசாரிக்க ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் விசாரணைக் குழுவை அமைத்தது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, ஜம்மு காஷ்மீர் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரிகள், வினாத்தாள்களை தயாரித்த பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரிகள், பயனாளிகள் மற்றும் பிறர் பெரும் முறைகேடுகளில் ஈடுபட்டதை உறுதி செய்துள்ளது.ஜம்மு, ரஜோரி மற்றும் சம்பா மாவட்டங்களில் இருந்து வழக்கத்துக்கு மாறாக அதிகம் பேர் தேர்வாகி உள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக 33 பேர் மீது கடந்த மாதம் 5ம் தேதி சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் பணியாளர் தேர்வு வாரியத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் அசோக் குமாரின் வீடு, இதன் முன்னாள் தலைவர் காலித் ஜஹாங்கீரின் வீடு உட்பட ஜம்மு, ஸ்ரீநகர் முழுவதும், அரியானாவின் கர்னால், மகேந்தர்கர், ரேவாரி, குஜராத்தில் காந்திநகர், டெல்லி, உத்தர பிரதேசத்தில் காசியாபாத், கர்நாடகாவில் பெங்களூரு என 33 இடங்களில், இந்த  முறைகேடு தொடர்பாக சிபிஐ நேற்று சோதனை நடத்தியது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ நடத்தும் 2வது சோதனை இதுவாகும். …

Related posts

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் போதைப்பொருள் பறிமுதல்

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கனமழையால் நூற்றுக்கணக்கான லாரிகள் வெள்ளத்தில் மூழ்கியது