எல்லை பாதுகாப்பு படையில் ‘ஏர் கிராப்ட்’ இன்ஜினியர் கட்டிடத்தில் மலை தேன் கூடுகள் அகற்றம்

கோவை, ஜூன் 19: கோவை பாலசுந்தரம் சாலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான உயரமான கட்டிடத்தில் 3 மலைத்தேன் கூடுகள் இருந்தது. ஊழியர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதால் அவற்றை அகற்ற முடிவு செய்தனர். நேற்று மதியம் கோவை மாவட்டம் காரமடையில் வசித்து வரும் வட மாநில தொழிலாளியான சோகில் என்பவர் கயிறு மூலம் கட்டிடத்தின் உயரத்தில் ஏறி மரத்திலிருந்து பறித்த பச்சை இலைகளில் பஞ்சுகளை வைத்து தீ மூட்டி அதில் வந்த புகை மூலம் தேனீக்களை அப்புறப்படுத்தினார். 2 தேன் கூடுகளை அவர் அகற்றினார். பின்னர் அந்த தேன் அடைகளை கீழே கொண்டுவந்து சாலையோரம் வைத்து வியாபாரம் செய்தார். ஒரு கிலோ 600 ரூபாய் வரை விற்பனை ஆனது. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்