எர்ணாகுப்பம் கிராமத்தில் ரேஷன் கடை திறப்பு

பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சி எர்ணாகுப்பம் கிராமத்தில் புதிய பகுதி நேர ரேஷன்கடை திறக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வடமதுரை ஊராட்சியில் சுமார் 6000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் வடமதுரை பெரிய காலனியில் ஒரே ஒரு ரேஷன் கடை தான் உள்ளது. எர்ணாகுப்பம் பெரிய காலனி பகுதியைசேர்ந்த சுமார் 724 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெற்று வந்தனர். எர்ணாகுப்பம் கிராம மக்கள் நீண்டதூரம் சென்று பொருட்கள் வாங்கும் நிலை இருந்தது. இந்நிலையில் எர்ணா குப்பம் மக்கள் தங்கள் பகுதிக்கு ரேஷன்கடை வேண்டுமென்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதையேற்று புதிய ரேஷன்கடை எர்ணாகுப்பத்தில் திறக்கப்பட்டது.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி தலைவர் காயத்ரி கோதண்டன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கடையை திறந்து மக்களுக்கு பொருட்களை வழங்கினார்.  இதில் கூட்டுறவு சங்கச்செயலர் முருகேசன், ஊராட்சி துணைத்தலைவர் பாக்கியலட்சுமி ரமேஷ், வார்டு உறுப்பினர் கிரிஜா விஜயகுமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜோதி கருணாகரன், புஷ்பலிங்கம், ஜோதி, ராஜேஷ் நாயுடு, குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்….

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு