எய்ட்ஸ் மருந்துக்கு தட்டுப்பாடு இல்லை: ஒன்றிய அரசு விளக்கம்

புதுடெல்லி: எய்ட்ஸ் நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகளுக்கு கடந்த சில மாதங்களாக கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை முன்வைத்து டெல்லியில் எச்ஐவி நோயாளிகள் போராட்டமும் நடத்தினர். இந்நிலையில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருந்துகள் போதுமான அளவுக்கு கையிருப்பு உள்ளதாக ஒன்றிய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், மாநில அளவில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான ஆன்டிரெட்ரோவைரல் மருந்துகள் கையிருப்பு இல்லை என்று எந்த அறிக்கையும் இதுவரை வரவில்லை. மேலும், உயிர்காக்கும் மருந்துகளை வாங்குவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 95 சதவீதம் பேருக்கு தேவையான மருந்துகள் இருப்பு உள்ளன,’ என தெரிவித்தனர்….

Related posts

வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 323ஆக உயர்வு..!!

தமிழ்நாடு மீனவர்கள் 83 பேர் இலங்கை சிறையில் உள்ளனர்: ஒன்றிய அரசு தகவல்

பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா வெளிநாடு தப்பினார்..!!