எம்எல்ஏவுக்கு எதிர்ப்பு ஆந்திர அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு

திருமலை: ஆந்திர மாநிலம் பெனுகொண்டாவில் ஆளுங்கட்சி எம்எல்ஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சி கூட்டத்திற்கு பங்கேற்க சென்ற அமைச்சர் கார் மீது கட்சி தொண்டர்கள் செருப்புகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தப்புரம், ஸ்ரீசத்ய சாய் மாவட்டத்தில் கட்சி  கூட்டத்திற்கு ஆந்திர மாநில மின்சாரம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் பெத்தி ரெட்டி ராமசந்திரா ரெட்டி நேற்று முன்தினம் சென்றார். பெனுகொண்டாவில் அமைச்சர்  ராமசந்திரா ரெட்டி காரில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அனந்தபுரம் எம்எல்ஏ சங்கரநாராயணனும் இருந்தார். இந்நிலையில்  ஒய்.ஜங்ஷனில்  ‘எம்எல்ஏ  சங்கர் நாராயணா வேண்டாம்’ என கட்சியினர் கோஷம் எழுப்பினர். அவர்களை சமாதானப்படுத்த அமைச்சர் காரில் இருந்து கீழே இறங்கினார். அப்போது அமைச்சரின் கார் மீது கட்சி தொண்டர்கள் திடீரென செருப்புகளை வீசினர்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது….

Related posts

பிரதமர் மோடியின் முதலாளித்துவ கொள்கைகளின் சக்கரவியூகத்தை ஹரியானா மக்கள் உடைப்பார்கள்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்து

புதுச்சேரியில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு: முதல்வர் ரங்கசாமி

கேரளாவில் மழை தொடர்கிறது; 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை