என் மகன் படத்துக்கு நான் புரமோஷன் பண்ணினா உங்களுக்கு என்ன?..அமிதாப்பச்சன் கோபம்

மும்பை: என் மகன் படத்துக்கு நான் புரமோஷன் பண்ணினா உங்களுக்கு என்ன என நெட்டிசன்களை கடிந்துகொண்டார் அமிதாப் பச்சன். அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் நடித்துள்ள இந்தி படம் தஸ்வி. இந்த படம் இன்று ஓடிடியில் வெளியாக உள்ளது. இதையொட்டி, அமிதாப் பச்சன் தனது சமூக வலைத்தளங்களில் தஸ்வி படத்தின் பாடல்களை வெளியிட்டும், பட புரமோஷன் வீடியோக்களை வெளியிட்டும் வருகிறார். இதையெல்லாம் பார்த்த நெட்டிசன்கள் சிலர், உங்கள் மகன் என்பதால் படத்தை புரமோட் செய்கிறீர்களா? பாலிவுட் முழுக்க நெப்போடிசம் வளர்ந்திருக்கிறது என்றெல்லாம் கருத்துகளை பதிவு செய்து வந்தனர். இது அமிதாப் பச்சனுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அமிதாப் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், என் மகன் படத்துக்கு நான் விளம்பரம் தேடுகிறேன், புரமோட் செய்கிறேன், பிரசாரம் பண்ணுகிறேன். ஆமாம். இதில் உங்களுக்கு என்ன? என கோபமாக கேட்டுள்ளார்….

Related posts

மதியம் 1 மணி நிலவரம்: ஹரியானாவில் 36.69% வாக்குப்பதிவு

1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் வழங்க ரூ.13.45 கோடி செலவில் திருமலையில் அதிநவீன சமையல் கூடம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திறந்து வைத்தார்

11 மணி நிலவரம்: ஹரியானாவில் 23% வாக்குப்பதிவு