என் தவறுகளை சுட்டிக்காட்டினால் திருந்துவேன்: ஜெயம் ரவி பேச்சு

சென்னை: எடிட்டர் மற்றும் தயாரிப்பாளர் மோகன் மகன்கள் இயக்குனர் மோகன் ராஜா, நடிகர் ெஜயம் ரவி. தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் ‘ஜெயம்’ படத்தில் அறிமுகமான ரவி, தற்போது 25 படங்களில் நடித்துள்ளார். சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். நேற்று முன்தினம் அவரது 42வது பிறந்தநாள். இந்த 3 நிகழ்ச்சிகளையும் இணைத்துக் கொண்டாடிய ஜெயம் ரவி, அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் நடிக்க வந்து 20 வருடங்களாகி விட்டது. ஆனால், இதுவரை 25 படங்களில் மட்டுமே நடித்துள்ளேன். சக நடிகர்களுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைவுதான். எனக்குப் பிறகு வந்தவர்கள் 40, 45 படங்களில் நடித்துவிட்டனர். குவான்டிட்டியை விட குவாலிட்டி முக்கியம் என்று  நினைத்து செயல்படுகிறேன். ‘ஜெயம்’ படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற பிறகும் நான் 8 மாதங்கள் வீட்டிலேயே உட்கார்ந்திருந்தேன்.  உடனே நான், ‘எதற்கு இப்படி சும்மா உட்கார்ந்திருக்கிறேன்’ என்று யோசித்தேன். உடனே அப்பா சொன்னார், ‘நல்ல படம் உன்னைத்தேடி வரும் வரை சும்மா உட்கார்ந்து இருப்பதில் எந்த தவறும் இல்லை. ஹிட் கொடுத்துவிட்டோமே என்று, கிடைத்த படங்களில் எல்லாம் நடிக்காதே’ என்று அட்வைஸ் செய்தார். இன்றுவரை அந்த அட்வைசை நான் பின்பற்றி வருகிறேன். அதனால்தான் எனது திரைப்பயணத்தில் தோல்விப் படங்களின் சதவிகிதம் குறைந்து காணப்படுகிறது. எனது வெற்றிக்கு அதுவே காரணம் என்று நம்புகிறேன். தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். இத்தனை வருட பயணத்தில் அனைவரிடமும் இருந்து பல்வேறு விஷயங்களைக் கற்றுள்ளேன். அது எப்படிப்பட்ட கடுமையான விமர்சனமாக இருந்தாலும் சரி, அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவம் எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் இருக்கிறது. எனது படங்களில் இருக்கும் நல்ல விஷயங்கள் மற்றும் தவறுகளை தாராளமாக  சுட்டிக்காட்டுங்கள். கண்டிப் பாக என்னை திருத்திக் கொள்கிறேன் என்று வெளிப்படையாகவே சொல்கிறேன்….

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்