என்னை அவமதித்தால் அமைச்சர் பதவியை காலி செய்து விடுவேன் கவர்னர் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரள அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில் கவர்னர் ஆரிப் முகம்மது கான் நேற்று டிவிட்டரில், ‘முதல்வரும், அமைச்சரவையும் கவர்னருக்கு அறிவுரை கூற எல்லா உரிமையும் உண்டு. ஆனால் கவர்னர் பதவிக்கு களங்கம் ஏற்படும் வகையில் சில அமைச்சர்கள் என்னை அவமரியாதையாக பேசி வருகின்றனர். இது ஏற்கத்தக்கதல்ல. அமைச்சர்களின் இந்த நடவடிக்கை தொடர்ந்தால் மந்திரி பதவியை ரத்து செய்யவும் தயங்க மாட்டேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். கவர்னரின் இந்த அசாதாரணமான கருத்து கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவர்னரின் இந்தக் கருத்துக்கு கேரள உள்ளாட்சித் துறை அமைச்சர் ராஜேஷ், இடது முன்னணி ஒருங்கிணைப்பாளர் கோவிந்தன் மற்றும் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்….

Related posts

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு

கேதார்நாத்தில் பெண் பக்தருக்கு பாலியல் தொல்லை; 2 எஸ்ஐ சஸ்பெண்ட்