எனக்கு எதிரானவர்களை பாஜ மேலிடம் கண்டித்து அனுப்பியது: முதல்வர் எடியூரப்பா பெருமிதம்

பெங்களூரு: முன்னாள்  பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 57வது நினைவு தினம் முன்னிட்டு பெங்களூரு  விதானசவுதா வளாகத்தில் உள்ள அவரின் சிலைக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி  செலுத்திய பின் செய்தியாளர்களிடம் முதல்வர் எடியூரப்பா  கூறியதாவது: நான்  யார், கட்சிக்கு எனது கொடை என்னவென்பது பாஜ தலைமைக்கு தெரியும். ஓய்வில்லாமல் உழைத்து வருகிறேன். கொரோனா தொற்று காலத்தில்  நான் எப்படி சுழன்று பணியாற்றி வருேறன் என்பது பிரதமர் என்னை பாராட்டி  இருப்பது அரசியல் எதிரிகளுக்கும் தெரியும்.  மாநிலத்தில்  ஆட்சி தலைமை மாற்றம் என்ற பெயரில் சிலர் டெல்லி சென்றனர். கட்சி மேலிட  தலைவர்களிடம் புகார் கொடுத்தனர். அதே சமயத்தில் எனக்கு எதிராக புகார் கொடுத்தவர்களை கட்சி தலைமை  எப்படி கண்டித்து அனுப்பியதும் என்ற தகவலும் தெரியும். கட்சி தலைமை  விரும்பாத எந்த செயலையும் நான் செய்யவில்லை. அப்படி இருக்கும்போது, என்னை  மாற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை. இது புரியாத சிலர் எனக்கு எதிராக  போர்க்கொடி உயர்த்தி, கட்சி மேலிடத்திடம் மூக்கை உடைத்து கொண்டுள்ளனர்.  இனியும் இதுபோன்ற முயற்சியை மேற்கொள்ளமாட்டார்கள் என்று நம்புகிறேன்….

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!