எடப்பாடி தொகுதியில் 7-வது முறையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி: எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் 7-வது முறையாக போட்டியிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். எடப்பாடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். எடப்பாடி தொகுதியில் இதுவரை 6 முறை போட்டியிட்டு 4 முறை எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். 1989-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக எடப்பாடி தொகுதியில் போட்டியி்ட்டார். 1989-ல் எடப்பாடி தொகுதியில் ஜெயலலிதா அணியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991, 2011, 2016 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். 1996, 2006 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இன்று சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் அலுவலகத்தை முதல்வர் திற்ந்து வைத்தார். அலுவலகத்தை திறந்து வைத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். …

Related posts

என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி

கிளைச் செயலாளர்போல் செயல்படுகிறார் எடப்பாடி: கே.சி.பழனிசாமி தாக்கு

சொல்லிட்டாங்க…