ஊர் ஒற்றுமைக்காக உலகம்பட்டியில் சிறப்பு மாட்டு பொங்கல் திருவிழா

பொன்னமராவதி : பொன்னமராவதி அருகே உலகம்பட்டியில் ஊர் ஒற்றுமைக்காக சிறப்பு மாட்டு பொங்கல் திருவிழா நடந்தது.பொன்னமராவதி அருகே உலகம்பட்டி கிராமத்தில் மாட்டு பொங்கல் திருவிழா ஊர் ஒற்றுமைக்கான திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.அதுபோல உலகம்பட்டியில் நேற்று மாட்டு பொங்கல் திருவிழா நடந்தது. கருப்பையா தலைமையில் உலகம்பட்டி, கண்டியாநத்தம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் ஊர் கோயிலான நம்பையா கோயிலுக்கு ஊர்வலமாக பொங்கல் கூடைகளுடன் பொங்கல் தளத்துக்கு சென்றனர்.பின்னர் நம்பையா சுவாமிக்கும் கோயில் மாட்டுக்கும் சிறப்பு அலங்காரத்துடன் பூஜை நடந்தது. அதைதொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்தனர். பின்னர் கால்நடைகளுக்கு கோயில் தீர்த்தம் தெளிக்கப்பட்டது. இவ்வாறாக ஊர் ஒற்றுமைக்கான விழாவாக மாட்டு பொங்கல் விழா உலகம்பட்டியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது….

Related posts

கோவையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு

குமரியில் மக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் மது அருந்திய 33 பேர் மீது வழக்கு பதிவு

திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் பனியன் நிறுவனத்தில் தீ விபத்து