ஊரம்பு சந்தையில் அழுகிய நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மீன்கள் பறிமுதல்

நித்திரவிளை, செப். 26: கொல்லங்கோடு அருகே ஊரம்பு பகுதியில் உள்ள தினசரி சந்தையில் அழுகிய நிலையில் மீன்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பிரவீன் ரகு(தக்கலை), ஜெப்றி(முஞ்சிறை), சுகாதார ஆய்வாளர் பிஜு ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று மதியம் ஊரம்பு சந்தையில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அழுகிய நிலையில் மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதையடுத்து அந்த மீன்களை பறிமுதல் செய்து, அதில் பிளீச்சிங் பவுடர் போட்டு அழித்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள வணிக வளாகங்களில் ஆய்வுகள் செய்தனர்.

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது