ஊரடங்கால் நிறுத்தப்பட்ட கீழடி அகழாய்வு பணி மீண்டும் தொடக்கம்

திருப்புவனம்: கீழடியில் கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த பிப்.13ம் தேதி தமிழக தொல்லியல் துறை சார்பில் 7ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது. இதேபோல் கீழடி அருகே உள்ள அகரம், கொந்தகை, மணலூரிலும் அகழாய்வு பணிகள் நடந்து வந்தன. கீழடியில் 5 குழிகள், கொந்தகை, அகரத்தில் தலா 3 குழிகள், மணலூரில் 2 குழிகள் தோண்டப்பட்டன. அகழாய்வில் சுடுமண் பகடை, கல்உழவு கருவி, பாசி, மணிகள், மூடியுடன் கூடிய பானை உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன. தமிழகம் முழுவதும் கடந்த மே 10ம் தேதியில் இருந்து முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது முழு ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் 27 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் பணிகள் தொடங்கின. முதற்கட்டமாக, அகழாய்வு குழிகள் மீது மூடப்பட்டிருந்த தார்ப்பாய்களை அகற்றி இடத்தை சுத்தம் செய்யும் பணி நடந்தது. இன்று முதல் அகழாய்வு தளத்தில் பணிபுரியும் அனைவரையும் அலுவலர்கள் வர சொல்லியுள்ளனர். எனவே மீண்டும் பணிகள் முழு வீச்சில் தொடங்க உள்ளது….

Related posts

மக்களுடன் முதல்வர், காலை உணவுத் திட்டம் வரும் 11 மற்றும் 15ம் தேதிகளில் விரிவாக்கம்: எம்.பி, எம்எல்ஏக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு