ஊரக பகுதிகளில் உள்ள சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார உட்கட்டமைப்புகளின் முன்னேற்றம் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம்

சென்னை: மக்களிடையே  மனமாற்றத்தை ஏற்படுத்தி, சுகாதார பழக்கவழக்கங்களை ஊக்கப்படுத்திடும் நோக்கத்துடன் நம் நாட்டில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி I தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, திடக்கழிவு மேலாண்மை, தொடர் கழிப்பறை பயன்பாடு மற்றும் கழிவு நீர் மேலாண்மை மூலம் பார்வைக்கு தூய்மையாக காட்சியளிக்கும் கிராமங்களை உருவாக்குவதே 2020-21-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி II-இன் முக்கிய நோக்கம் ஆகும். இதன் மூலம் “சுத்தமான  மற்றும் பசுமையான” கிராமங்களை அடைவதே இலக்காகும்.  ஊரக பகுதிகளின் தூய்மை நிலை மற்றும் அங்கு அமைந்துள்ள சுகாதார வசதிகளை ஆய்வு செய்யும் பொருட்டு, ஒன்றிய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் சுகாதாரத்திற்கான ஆய்வினை (தூய்மை கணக்கெடுப்பு (ஊரகம்)) மேற்கொள்கிறது. இந்த ஆய்வில், சுகாதாரத்திற்கான பல்வேறு முக்கிய குறியீடுகளை அடிப்படையாக கொண்டு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களின் சுகாதார நிலை ஆய்வு செய்யப்பட்டு தர வரிசைப்படுத்தப்படுகிறது.2022-ம் ஆண்டின் ஊரக தூய்மை கணக்கெடுப்பின் அடிப்படையில் தமிழகம் மூன்றாமிடம் பெற்றது. இதற்கான விருதினை 02.10.2022 அன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில், இந்திய குடியரசு தலைவரரிடம் இருந்து தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் அரசு முதன்மை செயலர் பெ.அமுதா இ.ஆ.ப ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.வீட்டுத்தோட்டம், தனி நபர் உறிஞ்சுக்குழிகள் மற்றும் சமுதாய உறிஞ்சுக்குழிகள் போன்ற கழிவு நீர் மேலாண்மை பணிகளை ஊக்குவிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட ‘சுஜலாம் 1.0’ எனும் 100 நாள் நீர் மேலாண்மை இயக்கத்தில் தமிழகம் தேசிய அளவில் ‘ஐந்தாம்’ இடம் பெற்றதற்கான விருதும்  அந்நிகழ்வில் வழங்கப்பட்டது. ஜல் சக்தி அமைச்சகத்தின் அமைச்சர் முன்னிலையில் இன்று (13.10.2022) சென்னையில் நடைபெற்ற ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் தூய்மை பாரத இயக்கத்திற்கான  ஆய்வுக்கூட்டத்தில்,  நம் மாநிலத்தில் உள்ள கிராம ஊராட்சியில் தயாரிக்கப்படும் “கிராம ஊராட்சிக்கான முழு சுகாதார திட்டத்தை” பாராட்டியதுடன் அதனை  இன்று சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் கலந்து கொள்ளும் பிற மாநிலத்தின் அரசு உயர் அலுவலர்களுடன் பகிருமாறு அறிவுறுத்தினார். இன்று (13.10.2022) சென்னையில், ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறையின் செயலர்  விநி மஹாஜன்.,இ.ஆ.ப தலைமையில், ஊரக பகுதிகளில் உள்ள சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார உட்கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றம் குறித்த தகவல்களை பகிரும் நோக்கில் தேசிய அளவிலான  கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் 28 மாநிலங்களிலிருந்து அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இக்கருத்தரங்கில், 2022-ல் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டதுடன், 2023-ல் நடைபெறவுள்ள ஆய்வின் கூறுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில், ஒன்றிய குடிநீர் மற்றும் சுகாதார துறையின் கூடுதல் செயலாளர் விகாஸ் ஷீல், இ.ஆ.ப, இணை செயலாளர் சமீர் குமார், இ.பொ.ப., ஒன்றிய ஊராட்சி துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் அலோக் பிரேம் நாகர், இ.வ.ப., தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் அரசு முதன்மை செயலர் பெ.அமுதா இ.ஆ.ப., மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். …

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு