ஊத்துக்கோட்டை அருகே குறைந்த மின்னழுத்த பிரச்னை தண்ணீர் பாய்ச்ச முடியாமல் கருகும் பயிர்கள்: விவசாயிகள் கவலை, நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 

ஊத்துக்கோட்டை, ஏப். 7: ஊத்துக்கோட்டை அருகே மாளந்தூர் கிராமத்தில் குறைந்தழுத்த மின்சாரத்தால் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். ஊத்துக்கோட்டை அருகே மாளந்தூர் ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள விவசாயிகள் 350 ஏக்கர் பரப்பளவில் நெல், மல்லி, கத்திரி போன்ற பயிர் செய்து வருகின்றனர். பயிர்களுக்கு தண்ணீர் மோட்டார் மூலம் பாய்ச்சுவதற்கு ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக போதிய அளவு மின்சாரம் இல்லாமல் குறைந்தழுத்த மின்சாரம் மட்டுமே வருகிறது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு, நீர்பாசனம் செய்ய முடியாமல் பயிர்கள் கருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி தலைவர், ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே இதில் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் தலையிட்டு சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை