ஊத்தங்கரை நகரில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் பாதிப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில், பீக் ஹவர்ஸ் எனப்படும் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியானது, கிருஷ்ணகிரி – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, சேலம் – வேலூர் தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் வாகனங்களால், நகருக்குள் வரும் டூவீலர், கார் போன்றவை போக்குவரத்து நெரிசலில் சிக்குகிறது. கடும் நெரிசலை கட்டுப்படுத்த ஊத்தங்கரை ரவுண்டானாவில் சிக்னல் அமைத்து, போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி