ஊதியூர் அருகே சந்தையில் வாக்குப்பதிவை வலியுறுத்‌தி துணிப்பை வழங்கி பிரச்சாரம்

 

காங்கயம், மார்ச் 20: ஊதியூர் அருகே கொடுவாய் வாரச்சந்தையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு துணிப்பைகளை வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டனர். தமிழகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் கமிஷன் பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது. ஊதியூர் அடுத்துள்ள எல்லப்பாளையம் புதூர் பஞ்சாயத்தில் கொடுவாய் வாரச்சந்தை இயங்கி வருகிறது.

இந்த சந்தையில் 100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் பொதுமக்களுக்கு துணிப்பைகள் வழங்கி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஊதியூர் அடுத்துள்ள எல்லப்பாளையம்புதூர், கொடுவாய் வாரச்சந்தையில் நேற்று பிற்பகல் காங்கயம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார் தலைமையில் காங்கயம் தாசில்தார் மயில்சாமி மற்றும் அலுவலரகள் பொதுமக்கள், கடைக்காரர்‌களுக்கு துணிப்பைகளை கொடுத்தனர். அப்போது அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

Related posts

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று வங்கிக்கடன் முகாம்

நாமக்கலுக்கு சரக்குரயிலில் 1250 டன் அரிசி அனுப்பிவைக்கப்பட்டது

டெல்டாவில் குறுவை சாகுபடியில் மந்தம் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு