ஊட்டி நகர திமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டம்

 

ஊட்டி, ஜன. 6: ஊட்டி நகர திமுக., வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டம் நடந்தது. ஊட்டி நகரத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டம் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளரும், ஊட்டி நகராட்சி துணை தலைவருமான ரவிகுமார், பூத் கமிட்டி பணிகள் குறித்து விளக்கினார்.

கூட்டத்தில், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, மாவட்ட அமைப்பாளர்கள் எல்கில் ரவி, காந்தல் ரவி, ஊட்டி நகர துணை செயலாளர் ரீட்டாமேரி, பொருளாளர் அணில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் தம்பி இஸ்மாயில், கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊட்டி நகரத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை