ஊட்டி அரசு கல்லூரியில் முதுநிலை படிப்பிற்கான விண்ணப்பம் விநியோகம்

 

ஊட்டி, அக். 17: ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை படிப்பிற்கான சேர்க்கை விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. ஊட்டி அரசு கல்லூரி முதல்வர் சனில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2023-24ம் கல்வியாண்டில் முதுநிலை படிப்புக்களுக்கான சேர்க்கை விண்ணப்பம் நேரடியாக 16ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான வகுப்புவாரி கலந்தாய்வு வரும் 19ம் தேதி நடக்கிறது.

இறுதிக்கட்ட கலந்தாய்வு 20ம் தேதியும் நடக்கும். இவ்வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் விண்ணப்பிக்க உதவும் வகையில் கல்லூரியில் மாணவர்கள் சேர்க் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளுக்கு சந்தேகம் ஏதேனும் இருப்பின் உதவி மையத்தை அணுகி அறிந்துக் கொள்ளலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.58 மற்றும் பதிவு கட்டணம் ரூ.2 என மொத்தம் ரூ.60 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை