ஊட்டச்சத்து பெட்டகம் டெண்டர் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டு அண்ணாமலை மீது சட்டரீதியான நடவடிக்கை; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறிய அனிதா டெக்ஸ்காட் நிறுவனத்துக்கு டெண்டர் தரப்படவில்லை. எனவே, அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு எழும்பூரில் உள்ள நல வாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி மையத்தில் நடந்த ரத்த தான நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், பரந்தாமன் எம்.எல்.ஏ, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டில் மட்டும் 3,43,667 அலகுகள் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. மேலும், குருதி கொடை வழங்கி வருவோரின் விவரங்களை சேகரித்து செயலி மூலம் பதிவு செய்ய ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மிக விரைவில் பதிவேடும், செயலியும் உருவாக்கப்பட உள்ளது. கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் குறித்து காழ்ப்புணர்ச்சியுடன் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். அண்ணாமலை கூறிய அனிதா டெக்ஸ்காட் நிறுவனம் 2ம் இடத்துக்கு சென்றுவிட்டது. எனவே, எல்.1க்கு தான் பணி ஆணை வழங்கப்படும். இந்நிலையில், அனிதா டெக்ஸ்கார்ட்க்கு தான் டெண்டரை தரப்போகிறார்கள் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டை அரசின் மீது சுமத்தினார். ஊட்டச்சத்து பெட்டக டெண்டரில் எல்.1 ஆக அண்ணாமலை கூறிய அனிதா டெக்ஸ்காட் வரவில்லை. பாலாஜி சர்ஜிக்கல் வந்திருக்கிறது. எனவே, ஆதாரமற்ற வகையில் குற்றச்சாட்டை சுமத்தியவர்கள் வருத்தமாவது தெரிவிக்க வேண்டும். இதுதான் நாகரிக அரசியலுக்கு அடையாளம். வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் நிச்சயம் துறையின் சார்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.  2018 டெண்டரில் பெட்டகத்தின் விலை ரூ.1996.41 ஆகும். தற்போது 2180.71 ரூபாய் என்பது டெண்டரில் வந்த குறைந்தபட்ச விலையாகும். கடந்த முறை ஆவின் நெய் ரூ.191.41க்கு கொடுக்கப்பட்டது. தற்போது ரூ.219.50க்கு வழங்கப்படுகிறது. அதையும் கூட குறைத்து கேட்க முயல்வோம். கடந்த முறைக்கும் தற்போதும் 150 ரூபாய் வித்தியாசம் உள்ளது. எனினும் கூட அந்த நிறுவனத்தினிடம் பேசி விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு ஆண்டில் 11 லட்சம் பெட்டகங்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு 5 பேர் டெண்டரில் பங்கேற்றுள்ளனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை