உள்ளாட்சி வேட்பு மனுக்களில் குற்றவழக்கு விவரம் சேர்க்க மனு: விசாரணை தள்ளி வைப்பு

மதுரை: ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நடத்தும் உள்ளாட்சி தேர்தலுக்கான பிரமாண பத்திரம் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் வடிவத்தில் இருக்கும். ஆனால், கடந்த 2019ல் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும், தற்போது நடந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட பிரமாண பத்திரம், கடந்த 2011ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட படிவத்தைப் போல இருந்தது. இதில் வேட்பாளரின் குடும்பத்தினரின் 5 வருட வருமானம், வருவாய் ஆதாரங்கள், குற்ற வழக்கு உள்ளிட்ட பல விவரங்கள் இல்லை.வேட்பாளர்கள் மீதான கிரிமினல் வழக்குகளின் நிலுவை விவரம் குறித்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்த வேண்டுமென ஏற்கனவே ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், உள்ளாட்சி தேர்தலில் அமல்படுத்தவில்லை. எனவே, விரைவில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறையாக பின்பற்றவும், இந்த நடைமுறையை பின்பற்றாமல் தேர்தல் நடத்தக் கூடாது என்றும், வேட்புமனு மற்றும் பிரமாண பத்திரத்தை தேர்தல் ஆணைய வெப்சைட்டில் உடனடியாக பதிவேற்றம் செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வேட்புமனு விவரங்கள் உள்ளதா என்பது குறித்து பதிலளிக்க, மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் அவகாசம் ேகாரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மனு மீதான விசாரணையை தள்ளி வைத்தனர்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்