உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி ஊழியர்களுக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்பு

ஈரோடு : நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தலில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி ஊழியர்களுக்கான முதல்கட்ட  பயிற்சி வகுப்பு நேற்று மாவட்டடம் முழுவதும் நடைபெற்றது. தமிழகத்தில்  நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் வருகின்ற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்குச்சாவடியில் பணியாற்ற உள்ள ஊழியர்களுக்கு முதல் கட்ட  பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு  மாநகராட்சி, பவானி, கோபி, சத்தி, புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள், 42  பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஈரோடு மாநகராட்சியில் 443  வாக்குச்சாவடி மையங்கள், 4 நகராட்சிகளில் 153 வாக்குச்சாவடி மையங்கள்,  42 பேரூராட்சிகளில் 655 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 1251 வாக்குச்சாவடி  மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடி மையங்களில்  6005 ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கான முதல்கட்ட பயிற்சி முகாம்  மாவட்டம் முழுவதும் நேற்று நடைபெற்றது. அந்தந்த பகுதியில் உள்ள தேர்தல்  நடத்தும் அலுவலர்கள் பயிற்சி வகுப்புகளை நடத்தினர். ஈரோடு  மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 2 இடங்களில் பயிற்சி வகுப்புகள்  நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாருளம், தேர்தல் நடத்தும் அலுவலரான  சிவக்குமார், தேர்தல் பிரிவு உதவி ஆணையர் குமரேசன், தொழில்நுட்ப  பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். மாவட்டத்தில் 4 நகராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் தலா ஒரு இடத்திலும்,  பேரூராட்சிகளுக்குட்பட்ட தலா ஒரு இடம் வீதம் 42 இடங்கள் என மொத்தம் 48  இடங்களில் நேற்று பயிற்சி வழங்கப்பட்டது. 2ம் கட்ட பயிற்சி வகுப்பு  வருகிற 9ம் தேதியும், இறுதி கட்ட பயிற்சி வகுப்பு 18ம் தேதியும் நடைபெறும்  என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. …

Related posts

சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

எம்.எல்.ஏ. பரந்தாமனின் நம்ம Egmore’’ செயலியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

தொழில்முனைவோர் – யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல், பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பான பயிற்சி