உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாததால் ரூ.1,324 கோடி நிதியை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை: தணிக்கை அறிக்கையில் தகவல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று இந்திய கணக்காய்வு தணிக்கை துறை தலைவரின் 2020ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியம் வழங்குவதில் ஒன்றிய நிதி ஆணையம் தாமதமாக பகிர்ந்து அளிப்பதை சுட்டிக்காட்டிவுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு ரூ.1,363 கோடி மானியம் ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.அதன்படி, 2017-18ம்  ஆண்டு ரூ.365.37 கோடியும், 2018-19 ஆண்டுகளில் ரூ.414.92 கோடி, 2019 -20 ஆண்டுகளில் ரூ.543.31 கோடி என மொத்தம் ரூ.1323.60 கோடி மானியம் விடுவிக்கப்படவில்லை என்றும், இதற்கு காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்று அரசு பதில் அளித்திருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு செயல் திறன் மானியத்தை விடுவிக்காதது அவசியமான நிதி ஆதாரம் பறிக்கப்படுவதற்கு சமம் என்றும் தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை