உலக மக்கள் அனைவரும் ரஷ்யாவிற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடுங்கள்… உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு!!

கீவ் : உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 29வது நாளாக தாக்குதலை தொடரும் நிலையில், உலக மக்கள் அனைவரும் ரஷ்யாவிற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடும்படி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். போர் காரணமாக உக்ரைனின் மக்கள் தொகையில் கால் பகுதியினர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். விரைவில் நடைபெற உள்ள நேட்டோ, ஜி7 மற்றும் ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாடுகளில் நண்பர்கள் யார், நம்மை காட்டிக் கொடுத்தவர்கள் யார் என்று தெரிய வரும் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.ரஷ்ய தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர உலக மக்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி போராட வேண்டும் என்று ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் உக்ரைனுக்கு மேற்கு உலக நாடுகள் ஆயுதங்கள் வழங்கவில்லை என்றும் ஜெலன்ஸ்கி வேதனையுடன் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு அவர் கூறியதாவது, ‘இந்த நாளில் இருந்து நீங்கள் உக்ரைனை ஆதரிக்கிறீர்கள் என்பதை காட்டுங்கள்.உங்கள் அலுவலகங்கள், உங்கள் வீடுகள், உங்கள் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து வாருங்கள்.அமைதியின் பெயரில் வாருங்கள். உக்ரைனை ஆதரிக்க, சுதந்திரத்தை ஆதரிக்க வாழ்க்கையை ஆதரிக்க உக்ரேனிய சின்னங்களுடன் வாருங்கள்.உங்கள் தெருக்களுக்கு வாருங்கள். சுதந்திரம் முக்கியம், அமைதி முக்கியம், உக்ரைன் முக்கியமானது. மார்ச் 24 முதல் உங்கள் நகரங்களில் போரை நிறுத்த விரும்பும் அனைவரும் ஒன்றாக திரளுங்கள்,’என்றார்….

Related posts

நஸ்ரல்லாவுக்கு பின் தலைவர் பதவியை ஏற்க இருந்த ஹஷேம் சபேதீன் இஸ்ரேல் குண்டு வீச்சில் ஹிஸ்புல்லா மூத்த தலைவர் பலி: லெபனானில் பதற்றம்

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

போஸ்னியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு