உலக ஜூனோசிஸ் தினம் கடைபிடிப்பு

சேலம், ஜூலை 10: உலக ஜூனோசிஸ் தினமானது, ஆண்டுதோறும் ஜூலை மாதம் விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய் குறித்த விழிப்புணர்வை, பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு விநாயகா மிஷனின் விமஸ் மருத்துவமனை அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நாட்டு நல பணித்திட்ட அமைப்பு, விழிப்புணர்வு நிகழ்ச்சியை கல்லூரி வளாகத்தில் நடந்தது. துறையின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் வரவேற்றார். சேலம் கால்நடை மருத்துவ கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனத்தின் கால்நடை பொது சுகாதாரம் மற்றும் தொற்று நோயியல் பிரிவின் உதவி பேராசிரியர் டாக்டர் அண்ணாதுரை, பங்கேற்று விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் குறித்தும், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இதற்கான ஏற்பாட்டினை துறையின் என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் தனசேகர்,டாக்டர் ஜெயபாலன், அல்போன்ஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்