உலக அமைதி வேண்டி 1008 திருவிளக்கு பூஜை

திருவாடானை, ஆக.4: திருவாடானை அருகே திருவெற்றியூரில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பாகம்பிரியாள் சமேத வல்மீக நாதர் சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று முன்தினம் இரவு உலக நன்மைக்காகவும், பொது அமைதி வேண்டியும், மக்கள் நோய் நொடியின்றி வாழவும் இந்து மக்கள் நல இயக்கம் சார்பில் 1008 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இந்த திருவிளக்கு பூஜையை தேவகோட்டை – அமராவதிபுதூர் சாரதா மகளிர் கல்லூரி நிர்வாகத்தினர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி, குங்குமம் மற்றும் மலர்களால் அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர். முன்னதாக கோயில் மூலவர்களான பாகம்பிரியாள் அம்மனுக்கும், வல்மீக நாதர் சுவாமிக்கும் பால், பழங்கள், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்