உலகிலேயே இந்திய கடற்படை வலிமை வாய்ந்ததாக திகழ்கின்றது: கோவா பிராந்திய தலைமை அதிகாரி பெருமிதம்

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தின் ஒரு பகுதியில்  ஹெலிகாப்டர் ஓட்டுனர் பயிற்சி மையமும் செயல்பட்டு வருகிறது. இங்கு 99வது ஹெலிகாப்டர் ஓட்டுனர் பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது. இதில், கோவா பிராந்திய கடற்படை தலைமை அதிகாரியும், ரியர் அட்மிரலுமான விக்ரம் மேனன் கலந்துகொண்டு 22 வாரங்கள் கடும் பயிற்சி முடித்த 9 வீரர்களுக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும், அனைத்து பயிற்சியிலும்  சிறந்து விளங்கிய சதிஷ்ராஜ் பிரதான் என்கின்ற  விமானிக்கு கேரள கவர்னர் சுழற்கோப்பையை வழங்கினார். பின்னர், ரியர் அட்மிரல் விக்ரம் மேனன் பேசுகையில், ‘ 795 ஹெலிகாப்டர் ஓட்டுநர்கள் பயிற்சி பெற்று இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படைகளில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். மேலும், உலகிலேயே இந்திய கடற்படை வலிமை வாய்ந்ததாக திகழ்கின்றது. இதனால், யாரும் எதற்கும் அஞ்ச வேண்டாம். எவ்வித அச்சுறுத்தல்களையும், சவால்களையும் இந்திய கடற்படை சந்திக்க தயாராக உள்ளது’ என்றார்….

Related posts

ஆர்ம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி மறுப்பு: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை விமானநிலையத்தில் இருந்து பெரம்பூர் புறப்பட்டார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி!

ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை!