சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 224 நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 கோடியே 67லட்சத்து 74 ஆயிரத்து 343 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 கோடியே 46லட்சத்து 91ஆயிரத்து 942 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 26 கோடியே 64 லட்சத்து 32ஆயிரத்து 374பேர் குணமடைந்துள்ளனர். , கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 55 லட்சத்து 53 ஆயிரத்து 642 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் பிரேசில் நாடு மூன்றாவது இடத்திலும், பிரிட்டன் 4 வது இடத்திலும், பிரான்ஸ் 5 வது இடத்திலும் உள்ளன….