உற்பத்தி செலவு அதிகரிப்பால் பட்டுக்கூடு கிலோ ரூ.600க்கு கொள்முதல் செய்ய வேண்டும்: பழநி கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

 

பழநி, மே 5: பழநி அருகே தும்பலப்பட்டியில் தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் காளிமுத்து தலைமை வகிக்க, மாநில செயலாளர் பொன்னுசாமி, பொருளாளர் கனகராஜ், ஒருங்கிணைப்பாளர் பி.செல்வராஜ் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில், உற்பத்தி செலவை கருத்தில் கொண்டு பட்டுக்கூடுகளுக்கு குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு ரூ.600 கொள்முதல் செய்ய வேண்டும், விற்பனை செய்த பட்டுக்கூடுகளுக்கு உடனடி பணப்பட்டுவாடா செய்ய வேண்டும். காப்பீடு திட்டத்தை புதுப்பிக்க வேண்டும். ஆன்லைன் விற்பனை முறையை கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் வலியுறுத்தப்பட்டது. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் அனைத்து பட்டுக்கூடு விவசாயிகள் சார்பில் கவனஈர்ப்பு கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதில் திண்டுக்கல், சாணார்பட்டி, ஒட்டன்சத்திரம் என பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பட்டுக்கூடு விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை