உறை பனி காரணமாக கருகும் தேயிலை செடிகள் மகசூல் இழப்பை தவிர்க்க கவாத்து பணியில் விவசாயிகள் தீவிரம்

 

ஊட்டி, பிப்.2: நீலகிரி மாவட்டத்தில் உறை பனி காரணமாக தேயிலை ெசடிகள் கருகி வரும் நிலையில் விவசாயிகள் தேயிலை செடிகளை கவாத்து செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக நிலவும் உறை பனிப்பொழிவு காரணமாக கடும் குளிர் நிலவி வருகிறது. உறை பனிப்பொழிவு கொட்டுவதால் காரணமாக புற்கள், செடி, கொடிகள் கருகி காய துவங்கியுள்ளன. கடந்த ஆண்டு அவ்வப்போது தேயிலை செடிகள், இலைகள் வளர்ச்சியடைந்து வந்த நிலையில், உறை பனியால் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள தேயிலை செடிகள் கருக துவங்கியுள்ளன.

நடுவட்டம், சோலூர், ஊட்டி, கரும்பாலம், ேசலாஸ், காட்டேரி, எல்லநள்ளி, மஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள் முற்றிலும் கருகி காணப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஊட்டி சுற்று வட்டார பகுதிகள், புறநகர் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் உள்ள தேயிலை செடிகளை கவாத்து செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பனி காரணமாக தேயிலை வளர்ச்சி தடைப்பட்டு தேயிலை மகசூல் வெகுவாக பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் அதிகளவு பனிப்பொழிவு காணப்படுவதால் குளிர் வாட்டியெடுக்கிறது. அதிகாலை நேரங்களில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் பாதிப்படைந்துள்ளனர். சில இடங்களில் தேயிலை ெசடிகள் மீது பனை ஓலை, கோத்தகிரி தாகை செடி கொண்டு பாதுகாப்பு செய்துள்ளனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை