உருளைக்கிழங்கு மூடைக்கு அடியில் மறைத்து கடத்திய 2,880 மது பாட்டில்கள் பறிமுதல்

திண்டுக்கல் : பெங்களூருவில் இருந்து சரக்கு வேனில், உருளைக்கிழங்கு மூடைக்கு அடியில் மறைத்து வைத்து, கடத்தி வந்த 2,880 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் தாலுகா போலீசார் குட்டியபட்டி அருகே நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உருளைக்கிழங்கு மூடைகளுக்கு அடியில் 40 பெட்டிகளில் 2,880 மது பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான அந்த பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பாட்டில்களை கடத்தி வந்த திண்டுக்கல் ஆசாரி சந்தை சேர்ந்த‌ இஸ்மாயில் (33), திண்டுக்கல் அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த பவுல் பெர்னாண்டஸ் (30) மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த ஷேக் சல்மான் (25) ஆகியோரை கைது செய்தனர்….

Related posts

திருப்பூர் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக மருமகன் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை: மருமகனும் தற்கொலை

அதிமுக நிர்வாகி கொலை: வாலிபர் கைது

விமானத்தில் அழைத்து வந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து மெகா பிசினஸ்: வாட்ஸ் அப் மூலம் தொழிலதிபர்களுக்கு வெளிநாட்டு பெண்கள், அழகிகள் சப்ளை