உரிமமின்றி இயங்கிய வாகனங்கள் பறிமுதல்

ராசிபுரம், ஜூன் 22: ராசிபுரம் பகுதியில் மோட்டார் வாகன அலுவலர்கள், காவல்துறையினர் இணைந்து நடத்திய வாகன சோதனையில், உரிமம் இல்லாமல் இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. ராசிபுரம் நகர் பகுதியில், பல்வேறு இடங்களில் ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா, நகர போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் நடராஜன், முத்துசாமி ஆகியோர், ராசிபுரம் – நாமக்கல் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றாமல் இயக்கிய பள்ளி வாகன ஒட்டுநர்கள் எச்சரிக்கப்பட்டு, வாகன உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதேபோல் தகுதி சான்று பெறாமலும், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றிச்சென்ற லாரி, ஆட்டோ போன்ற வாகனங்கள் சோதனையில் பிடிபட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், செல்போன் பேசியபடி டூவீலர் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் இயக்குதல், ஓட்டுநர் உரிமம், வாகன உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் சோதனையில் பிடிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டனர். 15 வாகனங்கள் சோதனை நடத்தப்பட்டதில் ₹64,500 சாலை வரியாக வசூலிக்கப்பட்டது. மேலும் இணக்கக்கட்டணமாக ₹41,500 நிர்ணயிக்கப்பட்டது. டூவீலர் ஓட்டிச்சென்ற பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு, அவரது பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை