உரங்களில் கலப்படம் செய்தால் உரிமம் ரத்து அதிகாரி எச்சரிக்கை

 

வேலூர், ஏப்.21: வேலூர் மாவட்டத்தில் உரங்களில் கலப்படம் செய்து விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் இணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.வேலூர் மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள கோடைகால நெல், மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை, எள் ஆகிய பயிர்களுக்கும் மற்றும் தென்னை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களுக்கும் தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனை சில்லரை உர விற்பனையாளர்கள் விவசாயிகளின் தேவைக்கு அதிகமாக உரம் வழங்கக் கூடாது, ஒரே நபருக்கு அதிகளவில் உரம் வழங்கக்கூடாது, இதனை போல விவசாயிகள் தாங்கள் உரம் வாங்க செல்லும்போது ஆதார் அட்டையுடன் சென்று உரம் வாங்க வேண்டும். உரங்களுடன் வேறு இடுபொருட்களை இணைத்து விற்பனை செய்தாலோ அல்லது உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைக்கு மேல் விற்பனை, உரங்களில் கலப்படம் செய்து விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் சோமு எச்சரித்துள்ளார்.

Related posts

பெருவாயில் பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம்: எம்எல்ஏ திறந்து வைத்தார்

தாமரைக்குப்பம் கால்வாய் மதகு சீரமைக்கும் பணி தொடக்கம்

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திய ஆம்னி பேருந்துக்கு அபராதம்