உப்பிலியபுரம் வேளாண் மையத்தில் நெல், மக்காச்சோள விதைகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

 

துறையூர், ஆக.23:நெல், மக்காச்சோள விதைகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உப்பிலியபுரம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் சம்பா நெல் பருவத்திற்கு தேவையான விதை நெல் ஆடுதுறை (ஏடீடி-54) உள்ளது. அதிக மகசூல் தரக்கூடிய, 130-135 நாட்கள் வயதுடையது. எக்டேருக்கு சராசரியாக 6300 கிலோ மகசூல் கிடைக்கக் கூடியது, குலை நோய், தண்டு துளைப்பான், நோய்களுக்கு எதிர்ப்பு திறன் கொண்டது. ADT 54 விதை நெல் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 % மானியத்தில் உள்ளது. மேலும் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்க திட்டத்தின் கீழ் சீரகச் சம்பா விதை நெல் விற்பனைக்கு உள்ளது.

இத்திட்டத்திலும் 50% சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். மேலும் இவ்வருடம் புதிதாக தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மக்காச்சோளம் விதைகள் மானியத்தில் உள்ளது. மக்காச்சோளம் பிஐஓ 9544 விதைகளுடன் உயிர் உரங்கள், நானோ யூரியா, இயற்கை உரங்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது. மேலும் வேளாண் காடுகள் திட்டத்தின் மூலமாக வேப்பமர கன்றுகள் இலவசமாக ஒரு விவசாயிகளுக்கு 60 கன்றுகள் வரப்பில் நடுவதற்கும், வயலில் நடுவதற்கு 200 கன்றுகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இப்பகுதி விவசாயிகள் பயன்பெற வேளாண்மை உதவி உப்பிலியபுரம் இயக்குனர் செல்வகுமாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி