உத்திரமேரூர் அருகே இலவச கண் சிகிச்சை முகாம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தில் தனியார் கண் ஆராய்ச்சி மையம் மற்றும் அஸ்காடு தொண்டு நிறுவனம் இணைந்து இலவச கண்சிகிச்சை மற்றும் விழிலென்ஸ் பொருத்தும் முகாமை நேற்று நடத்தின. பெருநகர் ஊராட்சி மன்ற  தலைவர் மங்களகௌரி வடிவேலு தலைமை தாங்கினார். தொண்டு நிறுவன இயக்குனர் லோகநாதன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் ருத்ரகோட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் வசந்திமுருகன் அனைவரையும் வரவேற்றார். முகாமில் கண்புரை, சதைவளர்ச்சி,  நீர் அழுத்தம், நீர் வடிதல், கண்எரிச்சல், கண்வலி, ஒற்றைத்தலைவலி, தூரப்பார்வை, கிட்டப்பார்வை, மாலைக்கண் நோய், தொடர்ச்சியான தலைவலி உள்ளிட்ட குறைபாடுகளுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண் சம்மந்தப்பட்ட பிரச்னைகளுக்கு பரிசோதனைகள் செய்து கொண்டனர். இவர்களில் கண் புரை குறைபாடுள்ள 78 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவசமாக புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பின் விழிலென்ஸ் பொருத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மேலும், 92 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.  நிகழ்வின்போது, ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை, சுந்தரம், தன்னார்வலர் தினகரன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்….

Related posts

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி