உத்தர பிரதேசத்தில் மோடி திறந்த சாலை ஐந்தே நாளில் காலி

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் மோடியால் ஐந்து நாளுக்கு முன் திறந்து வைக்கப்பட்ட நான்கு வழி விரைவுச்சாலை ஒரு மழைக்கே தாங்காமல்  சேதமடைந்தது விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. உபி மாநிலத்தில் புதிதாக பண்டல்காண்ட் விரைவு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.14 ஆயிரத்து 850 கோடி செலவில் 296 கிமீ நீளத்தில் இந்த நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையை  ஐந்து நாளுக்கு முன்னர் தான் பிரதமர் மோடி திறந்துவைத்தார்.  இந்நிலையில், உபியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் புதிய விரைவுச் சாலை ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. புதிய விரைவு நெடுஞ்சாலை  சேதமான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இது குறித்து பாஜ எம்.பி. வருண் காந்தி, ‘‘ரூ.15,000 கோடி செலவில் கட்டப்பட்ட விரைவுச் சாலை ஒருமழைக்குக் கூட தாங்காது என்றால், அதன் தரத்தைப் பற்றிய கவலைக்குரிய கேள்விகள் எழுகின்றன. இந்த திட்டத்தின் தலைவர், பொறியாளர் மற்றும் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுக்கும் சம்மன் அனுப்பி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ என்று டிவிட் செய்துள்ளார். …

Related posts

நில மோசடி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்!!

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார் ஹேமந்த் சோரன்

புதுச்சேரி அரசு மீது டெல்லியில் பாஜக எம்எல்ஏக்கள் புகார்: செய்தியாளர்கள் கேள்விக்கு புதுச்சேரி முதலமைச்சர் மழுப்பல்