உத்தமபாளையம் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

உத்தமபாளையம், ஆக. 30: உத்தமபாளையம் எஸ்.ஏ.பி. மெட்ரிக் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. கேரளாவில் மிக சிறப்பாகக் கொண்டாடும் ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத அஸ்த நட்சத்திரத்தில் இருந்து திருவோண நட்சத்திரம் வரை 10 நாட்கள் நடைபெறும். கேரளாவில் கொண்டாடப்படும் திருவோண பண்டிகை மாவலி சக்கரவர்த்தியின் நினைவாக உத்தமபாளையம் எஸ்.ஏ.பி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்விற்கு பள்ளி தாளாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.

செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஈஸ்வரன், நிர்வாக அலுவலர் ஜியாவுல் ஹக் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டு கேரள பாரம்பரிய நடனமாடி ஓணம் பண்டிகை கொண்டாடினர். கோலாகலமாக ஓணம் பண்டிகை கொண்டாடினர். தொடர்ந்து மாணவிகளுக்கு கேரள பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட்டது.

 

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை