உதகை – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை நாளை ரத்து: ரயில்வே நிர்வாகம் அறிவப்பு

நீலகிரி: உதகை – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில்பாதையில் விழுந்துள்ள பாறை, மண்குவியலை அகற்றும் பணி தொடர்வதால் மலை ரயில் சேவை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டங்களில் கடந்த 13ம் தேதி பெருத்த கனமழையால் கல்லாறு- ஹில்குரோவ் இடையே மலை ரயில் பாதையில் 10க்கு, மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் மழையின் காரணமாக தண்டவாளத்தில் பாறைகள் விழுந்தன. இதன் காரணமாக 16ம் தேதி வரை மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் உதகை – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.மேலும் ரயில் பாதையில் விழுந்துள்ள பாறை மற்றும் மண்குவியலை அகற்றும் பணி தொடர்வதால் மலை ரயில் சேவை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது….

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை