உடையார்பாளையம் அருகே தொடர் மது குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவர் குண்டாசில் கைது

ஜெயங்கொண்டம், ஜூலை 5: அரியலூர் மாவட்டம் உடையார்பளையம் அருகே உள்ள கொலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கசாமி மகன் நாகரெத்தினம் (40). இவர் கடந்த 23ம் தேதி கள்ளத்தனமாக மது விற்றது தொடர்பாக அரியலூர் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜெயங்கொண்டம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது பல்வேறு மதுக்குற்ற வழக்குகள் உள்ளன. இவர் வெளியில் வந்தால் தொடர்ந்து கள்ளத்தனமாக மது விற்பனை செய்வார் என்பதால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட எஸ்பி செல்வராஜ் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட எஸ்பியின் மேல்பரிந்துரையை ஏற்று, அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா மது குற்ற வழக்கில் ஈடுபட்ட நாகரத்தினம் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி தடுப்புக்காவலில் அடைக்க ஆணை பிறப்பித்தார். அதன் அடிப்படையில் நாகரத்தினம் குண்டர் தடுப்பு சட்டத்தின் படி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை