உடுமலை பம்ப்ஹவுசில் முதலை: பொதுமக்கள் அச்சம்

உடுமலை: உடுமலை பம்ப் ஹவுசில் பகுதியில் முதலை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். உடுமலை அருகே உள்ள அமராவதி ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தண்ணீரில் அடித்துவரப்படும் முதலைகள், அணை வழியாக வெளியேறிவிடுகின்றன. தற்போது அமராவதி ஆற்றில் ருத்ராபாளையம் பம்ப்ஹவுஸ் பகுதியில் முதலை ஒன்று நடமாடுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் ஆற்றுக்கு செல்ல முடியாமல் அச்சத்தில் உள்ளனர்.  முதலையை வனத்துறையினர் பிடித்து, அமராவதி முதலை பண்ணையில் சேர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்