உடுமலை ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் 42 தீர்மானங்கள் நிறைவேற்றம்

 

உடுமலை, பிப். 14: உடுமலை ஊராட்சி ஒன்றிய கூட்டம், ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமையில் உடுமலையில் நேற்று நடந்தது. துணைத்தலைவர் சண்முகவடிவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 26 தீர்மானங்களும், ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தார்சாலை, கான்கிரீட் சாலை, சிமென்ட் சாலை, குடிநீர் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட 16 கூடுதல் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இதில் பங்கேற்ற ஒன்றிய கவுன்சிலர்கள் பேசுகையில்,“கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் அங்காங்கே உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய தாமதமாகிறது.

உடனடியாக சரிசெய்து ஊராட்சி பகுதிகளில் முறையான குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய பகுதியில் உள்ள சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் எந்த ஊராட்சிகளுக்கு கிணறுகள் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும். கிராமங்களில் கால்நடைகளுக்கு அம்மை நோய் தடுப்பு மருந்து போட நடவடிக்கை எடுக்க வேண்டும். உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய அமர்வுத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். கூட்டத்தில், ஒன்றிய ஆணையர்கள் பியூலாஎப்சிபாய், சுப்பிரமணியன், உதவிப் பொறியாளர் சுப்பிரமணி, மேலாளர் ரங்கநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related posts

சமயபுரம் டோல்கேட்டில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செங்கோட்டை அருகே கார்-மினிலாரி மோதல் திருச்சியை சேர்ந்த இருவர் பரிதாப பலி

பலப்படுத்தும் பணி தீவிரம் தொட்டியம் அருகே மரத்திலிருந்து குதித்த சிறுவன் உயிரிழப்பு