உடுமலை அரசு கல்லூரி மாணவர்கள் தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்பு

உடுமலை, செப். 26: உடுமலை அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் தூய்மையே சேவை எனும் தலைப்பில் நடைபெற்று வரும் முகாமின் அங்கமாக தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கல்யாணி முன்னிலையில், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ரேவதி மற்றும் குமரவடிவேல் மேற்பார்வையில் அனைத்து மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.என்.எஸ்.எஸ் மாணவ தொண்டனாக இருப்பதால் எனது நாட்டில் தூய்மைக்காக வேலை செய்வேன், முழு இடத்தையும் ஒழுங்காகவும் சுத்தமாகவும் இருக்க செய்ய நான் முயற்சி செய்வேன், ஒவ்வொரு வருடமும் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு நான் 100 மணிநேரம் செலவிடுவேன் என்று உறுதியளிக்கிறேன். என் நாட்டிலும் மற்ற எல்லா பொது இடங்களிலும்,

கல்லூரிகளிலும், பள்ளிகளிலும், நகரங்களிலும் கிராமங்களிலும், பஸ் மற்றும் ரயில் நிலையங்கள், ஆறுகள், ஏரிகள் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளையும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருக்க செய்ய என் சிறந்த முயற்சிகளை நான் செய்வேன்.எல்லா இடங்களிலும் தூய்மைக்கு எதிராக செயல்படும் எந்த செயல்களிலும் நான் ஈடுபட மாட்டேன் என்பதை நான் உறுதி செய்கிறேன். எனது பொறுப்புணர்வு மற்றும் நேர்மையான முயற்சிகளுடன் என் வாழ்நாளின் என்னால் முடிந்த எல்லா வழிகளிலும் தூய்மை இந்தியா திட்டத்தை நிறைவேற்ற நான் முயற்சி செய்வேன் என்று உறுதிமொழி ஏற்றனர்.

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது