உடல் பருமன் vs அதிக எடை…

நன்றி குங்குமம் டாக்டர் இரண்டும் ஒன்றல்லகர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பது ஒரு பொதுவான நிகழ்வு. பெண்கள் தங்கள் முதல் மூன்று மாதங்களில் இருந்தே சில கிலோ கிராம் எடை அதிகரிப்பார்கள். கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பு என்பது தாய், குழந்தையின் நல்ல ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமான கர்ப்பத்தை சுட்டிக்காட்டும் அறிகுறி. உடலில் ஏற்படும் மாற்றங்கள், குழந்தையின் எடையே இதற்குக் காரணம்.  கர்ப்ப கால எடை அதிகரிப்பில் கொழுப்பின் கூறு இல்லை. இருப்பினும், இந்த திடீர் எடை அதிகரிப்பு கர்ப்பிணிகளுக்கு சில தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தலாம். உடலில் ஏற்படும் அனைத்து மாற்றங்களுடன் அவர்கள் மனஅழுத்தத்தையும் அனுபவிக்கத் தொடங்குகிறார்கள். மேலும், நேர்மறையான கண்ணோட்டத்துடன் இதை ஏற்றுக்கொள்வதுகடினம்.இந்த இடத்தில் சற்று அதிக எடையுடன் இருப்பதற்கும் பருமனாக இருப்பதற்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டைப் புரிந்துகொள்வது இன்றியமையாதது. புரிதல் இல்லாததால், ஆரோக்கியமான கர்ப்பத்திற்குத் தேவையான அளவு உணவைவிடக் குறைவாக உண்பதற்கும், டயட் உணவுகளையும் சிலர் முயற்சிக்கிறார்கள். ஒருவரின் உயரத்துக்குப் பொருத்தமான எடையை உடல் மீறுவது அதிக எடை என வரையறுக்கப்படுகிறது. உடல் பருமன் என்பது உடல் முழுவதும் அதிகப்படியான, அசாதாரணக் கொழுப்பு திரட்சியால் அடையாளப்படுத்தப்படுகிறது. உடல் பருமன் மனித ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.உடல் பருமன், அதிக எடை காரணமாக ஆபத்துக் காரணிகள்எடை அதிகரிப்பது இயல்பானது என்றாலும், சில ஆரோக்கியமான சத்தான உணவுத் திட்டங்கள், மிதமான உடற்பயிற்சியுடன் எடையைக் கட்டுப்படுத்துவதும் இன்றியமையாதது. அதிக எடை அல்லது உடல் பருமன் போன்ற நிலைமைகளைக் கொண்டிருப்பதால் ஏற்படும் அபாயங்களைத் தவிர்க்க, ஆரோக்கியமான எடைத் திட்டங்களை வரையறுப்பதற்கு ஒருவர் மருத்துவரை அணுக வேண்டும். இல்லாவிட்டால், அவை பல சுகாதார அபாயங்களை ஏற்படுத்தலாம்.கொழுப்புத் திரட்சியால் ஏற்படும் ஆபத்துக் காரணிகள் நிறைய உள்ளன. அதிக எடையுடன் இருப்பது ஒருவரின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாகவே கருதப்படுகிறது. அதிக எடையுடன் இருப்பது உயர் ரத்த அழுத்தம், மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. அதே சமயம், உடல் பருமனோ ஒரு நோயாக வகைப்படுத்தப்படுகிறது, ஏனெனில் இது நீண்டகால சுகாதார பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. அதிகப்படியான கொழுப்புத் திரட்சியானது நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், இதயநோய், பக்கவாதம் போன்றவற்றை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது. அத்துடன் பல்வேறு வளர்சிதை மாற்ற சுகாதார பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கிறது. உடல் பருமன், முடக்குவாதம், கொழுப்புக் கல்லீரல், கருவுறாமை, பல வகைப் புற்றுநோய்கள் தாக்குவதற்கான அதிக ஆபத்து, குறைந்த வாழ்க்கைத் தரம், தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றுடன் இது தொடர்புடையது. கர்ப்பம் காரணமாக ஏற்படும் சிக்கல்களை இவை இரட்டிப்பாக்கும்.கர்ப்பத்துக்கு முன் அதிக எடை அல்லது பருமனாக இருப்பது கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல் சிக்கல்களுக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். இது ரத்த அழுத்த பிரச்சனைகள், ப்ரீக்ளாம்ப்சியா, கர்ப்பகால நீரிழிவு, முன்கூட்டிய பிறப்பு போன்றவற்றுக்கான அபாயத்தை அதிகரிக்கிறது. அதிக எடை கொண்ட பெண்கள் தங்கள் குழந்தையின் எடையை அதிகரிக்க வேண்டும், அதே நேரம் கூடுதல் எடை அதிகரிப்பு பிறப்புச் சிக்கல்கள், பிரசவத்திற்குப் பிறகு எடையைத் தக்கவைக்கும் அபாயங்களுக்கும் வழிவகுக்கும்.தேவையான பரிசோதனைகளுக்குப் பிறகு மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே உணவுமுறை மாற்றங்கள், உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் சுயமான டயட் அல்லது உடற்பயிற்சியை திட்டமிடுவது குழந்தைக்கும் தாய்க்கும் தீங்கு விளைவிக்கலாம், சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம்.தொகுப்பு : ஜாய் சங்கீதா

Related posts

உடல் சூட்டை தணிக்கும் எண்ணெய் சிகிச்சை!

மனவெளிப் பயணம்

எலும்பியல் சிகிச்சையும் CT ஸ்கேன்களும் ஒரு பார்வை!