உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு ரூ.7,000 தீபாவளி போனஸ்: கலெக்டர் வாயிலாக முதல்வருக்கு மனு

 

பெரம்பலூர்,அக்.17: தமிழ்நாடு HMS கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பேரவை சார்பில், உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு 7000 ரூபாய் தீபாவளி போனஸ் கேட்டு மாவட்ட கலெக்டர் வாயிலாக தமிழக முதல்வருக்கு மனு அளித்தனர். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு எச்எம்எஸ் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் பேரவை சார்பில் அதன் தலைவர் சுப்ரமணியம், பொதுச் செயலாளர் கணேசன், கண்காணிப்பு குழு உறுப்பினர் பரஞ் சோதி உள்ளிட்டப் பலரும் கலெக்டரை சந்தித்து நேற்று(16ம் தேதி) மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில், ஹிந்து மஸதூர் சபா அமைப்பில், உள்ள கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலா ளர்களுக்கு, தீபாவளி போனசாக வாரியத்தில் இருந்து 7000 ரூபாய் வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு மாவட்டக் கலெக்டரின் வழியாக வலியுறுத்தும் வகையில் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு ஏற்று வாரியத்தின் மூலம் கட்டுமான மற்றும் உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ஆக 7 ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். நிகழ்ச்சியின் போது ஹிந்து மஸ்தூர் சபா நிர்வாகிகள், உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை