உச்சிப்புளி அரசு பண்ணையில் இரண்டு ரகத்தில் தென்னங்கன்று விற்பனை

மண்டபம்,ஏப்.30: மண்டபம் அருகே உச்சிப்புளியில் அரசு தோட்டக்கலைத் துறையின் கீழ் இயங்கி வரும் அரசு தென்னை நாற்று பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் நெட்டை மற்றும் குட்டை ரக தென்னை நாற்றுகள் விதையிட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த பண்ணையில் வளர்க்கப்படும் தென்னை கன்றுகள் ஆண்டு தோறும் விற்பனை செய்யப்படுகிறார்கள். இந்த தென்னை கன்றுகளை தமிழக பகுதியில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் வாங்கி செல்வார்கள்.

அதன் பேரில் உச்சிப்புளி வட்டாரம் உச்சிப்புளி தென்னை நாற்று பண்ணையில் வளர்க்கப்பட்ட 10 ஆயிரம் தென்னை நெட்டை ரக கன்றுகளும், 8 ஆயிரம் தென்னை நெட்டை மற்றும் குட்டை ரக கன்றுகளும் விற்பனைக்கு உள்ளதாகவும், ஒரு நெட்டை ரக தென்னை கன்று ரூ.60எனவும், ஒரு நெட்டை மற்றும் குட்டை ரக தென்னை கன்று ரூ.125 விலையில் விற்கப்படுகிறது. இந்த தென்னை கன்றுகளை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி பயன்பெறுமாறு ராமந்தாபுரம் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர்தெரிவித்துள்ளனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி