உக்ரைன் விவகாரம் 3ம் உலக போருக்கு வழிவகுக்கும்!: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை

மாஸ்கோ:  உக்ரைன் விவகாரம் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜிவ் லாவ்ரோவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் ரஷ்யா பெரும் இழப்பை சந்தித்துள்ளது. உலகின் சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியலில் இருந்த போதிலும், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா ெபரிய அளவில் எதையும் சாதிக்கவில்லை என்ற விமர்சனங்களும் முன் வைக்கப்படுகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு ஆயுதம், வெடிமருந்துகள், நிதியுதவி செய்வதும், ரஷ்யாவிற்கு மேலும் சிக்கலை அதிகப்படுத்தியுள்ளது. இதற்கிடையில், மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அனுப்பும் ஆயுதங்கள், ரஷ்ய ராணுவ தளங்களை குறிவைத்து தாக்கக் கூடும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜிவ் லாவ்ரோவ் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘உக்ரைன் விவகாரம் மூன்றாம் உலகப் போரின் உண்மையான அச்சுறுத்தலாக மாறக்கூடும். அது, மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும். அமைதிப் பேச்சு வார்த்தையில் உக்ரைன் விளையாடுகிறது. அமெரிக்காவுடனான உக்ரைனின் உறவு அமைதிப் பேச்சுவார்த்தையை மீறுவதாகும். எவ்வாறாயினும், உக்ரைனுடனான பேச்சுவார்த்தை தொடரும். உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, பாசாங்கு வேலைகளை செய்து வருகிறார். அவருடைய வார்த்தைகளில் ஆயிரக்கணக்கான முரண்பாடுகள் உள்ளன’ என்றார். முன்னதாக அமெரிக்க மூத்த அதிகாரிகள் சிலர் சமீபத்தில் உக்ரைனுக்கு சென்றனர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘ரஷ்ய படைகளை உக்ரைனால் தோற்கடிக்க முடியும்; ரஷ்ய படைகளுக்கு எதிராக உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவோம்’ என்றனர்….

Related posts

முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைய வேண்டும் இஸ்ரேல் மீது தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: ஈரான் உயர்தலைவர் அயதுல்லா அலி காமெனி ஆவேச பேச்சு

ஒரே நேரத்தில் காசா, மேற்குகரை, லெபனான் மீது இஸ்ரேல் மும்முனை தாக்குதல்; ஈரான் எண்ணெய் கிணறு, அணு உலைக்கு குறி: மத்திய கிழக்கு பகுதியில் தொடரும் போர் பதற்றம்

எங்களை சீண்டினால் அணுகுண்டுகளை வீசுவோம்: வடகொரிய அதிபர் சவால்