உக்ரைனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இந்திய மாணவர் போலந்து எல்லைக்கு வந்தடைந்தார்… நாளை இந்தியா திரும்புவார் என தகவல்

போலந்து: உக்ரைனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங் போலந்து எல்லைக்கு வந்தடைந்துள்ளார். உக்ரைன்-ரஷியா இடையே கடந்த 8 நாட்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர். குறிப்பாக உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். சிறப்பு விமானங்களில் இதுவரை 12,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்னதாக உக்ரைனில் இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங் என்பவர்  துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். அந்த தாக்குதலால் அவர் படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்த அவர் கீவ் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது கீவ் நகரில் ரஷ்ய படைகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதால், இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங் இந்திய வருவதற்காக போலந்து எல்லையை வந்தைடைந்துள்ளார். அவருக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்காக நாளை தாயகம் திரும்புவார் என ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் தகவல் தெரிவித்துள்ளார். …

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!