உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீன் உடல் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது… போர் முடிவுக்கு வந்தவுடன் இந்தியா கொண்டு வரப்படும்.: கர்நாடக முதல்வர் அறிவிப்பு

பெங்களூரு: ரஷ்யாவின் தாக்குதலில் உயிரிழந்த கர்நாடக மாணவர் நவீன் சேகரப்பா உடல் உக்ரைனில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் மருத்துவம் படிக்கும் மாணவர் நவீன் சேகரப்பா. இவர் கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகா சாலக்கேரி கிராமத்தை சேர்ந்தவர். நவீன் சேகரப்பா உக்ரைனில் உள்ள பல்கலைக்கழக்கில் 4-வது ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். உக்ரைனில் போர் நடந்து வருவதால், அங்கிருக்கும் பதுங்கு குழியில் நவீன் தங்கி இருந்தார். அவர் பதுங்கு குழியில் இருந்து வெளியே வந்து, தேவையான மளிகை பொருட்கள் வாங்குவதற்காக ஒரு கடையில் வரிசையாக நின்றிருந்த போது ரஷ்ய ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உக்ரைனில் இருந்து பல இந்தியர்கள் அண்டை நாடுகளுக்கு வந்து, அங்கிருந்து இந்தியாவுக்கு மீட்கப்பட்டு வருகின்றனர். ஆனால் சில இந்திய மாணவர்கள் உக்ரைனைவிட்டு வெளியே வரமுடியாமல் அங்கேயே தவித்து வருகின்றனர். இந்தநிலையில் இன்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், நவீன் உடல் எம்பாமிங் செய்யப்பட்டு உக்ரைனில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு சண்டை முடிவுக்கு வந்த பின் உடல் இந்தியா கொண்டு வரப்படும்’’ என்றார்….

Related posts

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்

காங்கிரசில் நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு